Sunday, 17 November 2013

கோழி முட்டையில் இரு நாடுகள் விளையாடும் விளையாட்டு!

இங்கிலாந்தில் இருக்கும் super market-களில் அமெரிக்க முட்டைகளை விற்பது, சட்டப்படி குற்றம். ஏனென்றால் அவை கழுவப்பட்டிருக்கும்.

அதே போல,

அமெரிக்காவில் இருக்கும் super market-களில் இங்கிலாந்து முட்டைகளை விற்பது, சட்டப்படி குற்றம். ஏனென்றால் அவை கழுவப்பட்டிருக்காது!

விறுப்பு, வெறுப்பு, குறை கூறுதல்

நீங்கள் ஒருவரை, அவருக்கு பிடித்த ஒன்று (மனிதர், பொருள், விஷயம்) அது உங்களுக்குப் பிடிக்காமல் இருந்தால், அதைப் பற்றி தொடர்ச்சியாக அவரிடம் குறை கூறிக் கொண்டிருக்கும் பட்சத்தில்,

அவர், தனக்குப் பிடித்த அந்த ஒன்றை வெறுக்க மாட்டார். மாறாக அவர் உங்களை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்!

என் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்டவை - 1#

பகையாளி-கிட்ட பாய்சன்-அ கூட வாங்கி குடிக்கலாம். ஆனா,

பங்காளி-கிட்ட பச்சத் தண்ணி கூட வாங்கி குடிக்கக் கூடாது.

போட்டுரலாமா... வேணாமா? (இரட்டுற மொழிதல் – 2#)

ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்த சாலையில் சிவாவும், ரமேஷும் தீவிரமாக எதைப்பற்றியோ சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு அருகே, பயந்தவாறு கலைந்த தலையுடனும், கிழிந்த ஆடைகளுடனும் ஒரு இளம்பெண் நின்று கொண்டிருக்கிறாள்!

சிவா   : மச்சா... சொன்னாக் கேளு, என்னாலயெல்லாம் இந்த 
         மாதிரி தப்பு பண்ண முடியாது...
         
ரமேஷ் : நீதான சொன்ன, இவ ரொம்ப நாளா தொந்தரவு 
         பண்ணிகிட்டு இருக்கானு. அதான் சொல்றேன்...
         பேசாம போட்டுரு!

அப்போது அந்தப் பெண் ரமேஷை பார்த்து மேலும் பயப்படுகிறாள்

சிவா   : டேய்! சொன்னா புரிஞ்சுக்கடா... இதல்லாம் தப்புடா...

ரமேஷ் : எது, இது தப்பா? இதல்லாம் தப்புன்னா, நாம இன்னும் 
         எவ்ளோ  பண்ண வேண்டியிருக்கு!
        
சிவா   : எனக்கென்னவோ ஒரு மாதிரியா இருக்குடா, நாமளே
         இதையெல்லாம் என்கரேஜ் பண்ணா நல்லாவா இருக்கு?

ரமேஷ் : எவண்டா இவன்... சரியான கிறுக்கனா இருக்கான்! 
         இதப்பாரு தம்பி, இந்த மாதிரி சின்ன 
         விஷயத்துக்கெல்லாம்
         யோசிச்சிகிட்டு இருந்தேனா...
         ஒன்னும் பண்ண முடியாது!
         
சிவா   : “....”

ரமேஷ் : கடைசியா கேட்கறேன், நா சொன்னா கேட்பியா... 
         மாட்டியா?

சிவா   : கேட்பேன்... ஆனால்,

ரமேஷ் : சரி, அப்ப யோசிக்காத. போட்டுரு...உன் 
         நல்லதுக்குத்தான்டா சொல்றேன்...
         (பொறுமை இழந்தவனாய்)
         டேய், பேசாம போற்றா..

ரமேஷின் பேச்சால், சிவா ஒரு முடிவுக்கு வந்தவனாய், சில வினாடிகள் அந்த பெண்ணையே முறைக்கிறான்... திடீரென,

வேகமாக, பின்னாலிருந்து...

பர்சை எடுத்து, அதிலிருந்த இரண்டு ரூபாய் நாணயத்தை, அந்தப் பிச்சைக்காரப் பெண்மணியிடம் நீட்டுகிறான்!

அவளும் அதை வாங்கிக்கொண்டு, “இதுக்கு இவ்வளவு நேரமா?” என மனதில் நினைத்தவாறே, அந்த இடத்தை விட்டு நகர்கிறாள்.

இதுதான் உலகம்!

நீங்கள் ஒரு செயலை எவ்வளவு சரியாக செய்தாலும், யாரும் அதை நினைவில் வைத்திருப்பதில்லை.

அதே செயலில் ஒரு சிறு தவறு செய்தாலும், யாரும் அதை அவ்வளவு எளிதில் மறப்பதில்லை!

அவர்கள்தான் அன்னியோன்யமானவர்கள்!

தனது காதலன் அல்லது காதலியுடன், இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் வரை பழகி, அதன் பிறகு திருமணம் செய்து கொள்கிறவர்கள், வெகு விரைவிலேயே திருமணம் செய்து கொள்கிறவர்களை விட மகிழ்ச்சியாகவும அதேசமயம் விவாகரத்து செய்யாமலும் வாழ்வதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன!

இன்னும் கொஞ்சம்... (இரட்டுற மொழிதல் – 1#)

ப்ரியா  : first time-ஏ ஒரு மணி நேரமா... வாவ்... வாட் ஏ பவர்!

மகேஷ் : உனக்கென்ன சொல்றதுக்கு... அதுக்கு நான் என்ன கஷ்டப்
         படறேன்-னு எனக்குதானே தெரியும்!

ப்ரியா  : உனக்கு இது முதல் தடவை-ல்ல, அதான் 
         கஷ்டமாயிருக்கு...

மகேஷ் : first time இத பண்ணும்போது கஷ்டமா இருக்கும்-னு 
         தெரியும், ஆனா, இவ்ளோ கஷ்டமா இருக்கும்-னு
         நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!
         
ப்ரியா  : ஆனா, நான் உங்கிட்ட இருந்து இன்னும் வேணும்-னு
         எதிர்பார்க்கறேனே!

மகேஷ் : என்னது இன்னுமா... இதுக்கே பெண்டு 
         நிமிர்ந்திடும் போல இருக்கு! என்னால 
         முடியாதுப்பா, ஆளை விடு!
         
ப்ரியா  : ஹலோ! இதுக்கே tired ஆகிட்டா எப்படி? நீ இன்னும் 
         செய்ய வேண்டியது, எவ்ளோ இருக்கு தெரியுமா?
         
மகேஷ் : ச்சே... நீ ரொம்ப மோசம்-டீ, என்னைப் போட்டு இப்படி
         படுத்துறியே?


ப்ரியா  : ஆமாம்ப்பா! ஒரு மணி நேரமா, வெறும் 
         பாத்திரங்களையே கழுவிகிட்டு இருந்தா எப்படி?
         இன்னும் துணி துவைக்கணும், வீடு
         பெருக்கணும், அப்புறமா dinner ரெடி பண்ணணும். 
         அப்போதானே நல்லா சாப்பிட்டு நாளைக்கு
         மீண்டும் இதே மாதிரி வேலை
         செய்ய முடியும்!


பிரசவத்திற்காக தாய் வீடு சென்றிருந்த ப்ரியா, முதன் முறையாக வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் தனது கணவன் மகேஷிடம் போனில் பேசிக்கொண்டிருக்கிறாள்!

ரெஸ்டாரன்ட்டுகளின் நகரம்

நீங்கள் நியூயார்க் நகரில் ஒரு நாளைக்கு ஒன்று எனும் விகிதத்தில் தினமும் புதுப்புது ரெஸ்டாரன்ட்-டுக்கு போகவேண்டும் என விரும்பினால், 50 ஆண்டுகள் வரை உங்களால் தினம் ஒரு புது ரெஸ்டாரன்ட்-டுக்கு செல்ல முடியும்.

பிரகாஷும்... ப்ளேபாயும்...

காலேஜ்- படிச்ச இந்த மூனு வருசத்துல, முதன் முதலா பிரகாஷ், வித்யாவை வெளியே கூட்டிகிட்டு போறான். கூட்டிகிட்டு போறான்னு சொல்றதவிட, வித்யாதான் ஏதோ பெரிய மனசு பண்ணி இவன் கூட வர, .கே சொன்னாள்-னு சொல்லனும்.

அதுவும் .சி. பஸ்-! சாதாரணமா, பிரகாஷ் .சி. பஸ்- எல்லாம் போக மாட்டான். கூட்டமா இருக்கற டவுன் பஸ்- கடைசியா ஏறி, இறங்க வேண்டிய ஸ்டாப் வந்ததுமே கண்டக்டர் மூஞ்சிய கூட பார்க்காம இறங்கிப் போற நல்ல பையன்!

வித்யா கூட ஊர் சுத்தணும்ங்கறதுக்காக, ஒரு வாரம் கஷ்டப்பட்டு விரதமிருந்து தம்-மு, சரக்கு இப்படி எதுவுமே தொடாம சேர்த்து வச்ச காசுலதான், அவளை .சி. பஸ்-, மாயாஜால்-க்கு கூட்டமே இல்லாத ஹிந்தியோ இல்ல இங்கிலீஷ் படத்துக்கோ, கூட்டிப் போறான்!

அப்பப்போ, கலாய்க்கிறதும், சிரிக்கிறதுமா அவகூட ஜாலியா கடலை போட்டுகிட்டு இருந்தான். அப்ப, அடுத்த ஸ்டாப்- பஸ் நின்னது. அதுல, பிரகாஷ் மாதிரியே ஒரு காலேஜ் பையன் ஏறினான். “ப்ளேபாய்”-னு சொல்ற அளவுக்கு எல்லா லட்சணங்களும் அவன் முகத்துலயும், நடவடிக்கையிலும் தெரிஞ்சது...

பிரகாஷை விட பர்சனாலிட்டியா இருந்ததாலயோ, இல்ல வேற காரணத்தினாலயோ, நம்ம பிரகாஷ் அவனையே பார்த்துகிட்டு இருந்தான். அப்ப, வித்யா இயர்போன்- பாட்டு கேட்டுகிட்டிருந்தா...

அப்போ பிரகாஷ் எதிர்பார்த்த மாதிரியே, அவன் இவங்க உட்கார்ந்திருந்த சீட்டுக்கு எதிர்ல வந்து நின்னு, வித்யாவை பார்க்கத் தொடங்கினான். வித்யா இத முதல்ல கவனிக்கல, ஆனா, பிரகாஷ் அவனைப் பார்த்து முறைக்க அவன் மொபைலில் ஏதோ நோண்டுவது போல நடித்தான்.

யாரு நேரமோ தெரியல, அந்த நேரம் பார்த்து இவங்களுக்கு பின்னாடி சீட்டுல உட்கார்ந்திருந்தவங்க எழுந்திருச்சு போக, அந்த ப்ளேபாய் நேரா அதுல போய் உட்கார்ந்துகிட்டான்.!

இதை கவனிச்ச வித்யா, கண்களிலேயே என்னன்னு கேட்க, பிரகாஷும் பதிலுக்கு ஒன்னும் இல்லியேங்கற மாதிரி தோளை குலுக்கினான். ஆனா வித்யா-க்கு பிரகாஷ் ஏன் இப்படி திடீர்-னு அப்நார்மலா பிஹேவ் பண்ணறான்னு புரிஞ்சு... விஷமமான சிரிப்போட .கே. .கே”- ன்னு தலைய ஆட்டி, மறுபடியும் பாட்டு கேட்க ஆரம்பிச்சிடுறா...

சில நிமிடங்கள் அமைதியாக கழிந்தது... திடீரென,

பிரகாஷ்?”

ம்ம்...”

என்ன யாரோ பின்னாடியிருந்து தொடுற மாதிரி இருக்குடா..”

மவனே! நான் கூட இருக்கறப்பவேவா... நம்மாளு முன்னாடி வெயிட்டு காமிக்கறதுக்கு செம்ம சான்ஸ்-டா, மிஸ் பண்ணாத-ன்னுமனசுக்குள்ள நினைச்சுகிட்டு...
அவனேதான்.. இப்ப என்ன பண்றேன்னு பாரு

சொல்லிகிட்டே, வித்யா ஏதோ சொல்ல வந்தத கூட கவனிக்காம,

பிரகாஷ் வேகமா திரும்பறான்!

அங்கே...

பின் சீட்டில் ஒரு இளம் ஜோடி உட்கார்ந்திருக்க, அதில் அந்த பெண்ணின் மடி மீது ஏறி நின்று கொண்டிருந்த அவர்களின் குட்டி பாப்பா, வித்யா தலையில இருந்த, பூ டிசைன் போட்ட ஹேர்பின்னோட விளையாடிகிட்டு இருந்தது!

பிரகாஷ் அவங்கள பார்த்து மழுப்பலா சிரிச்சிட்டு, அவன் எங்க போனான்-னு தேடினான்.

அவன் இவங்களுக்கு மூனு சீட்டு தள்ளி நின்னுகிட்டு, எதிர்- யார் கூடவோ போன்- பேசிகிட்டு இருந்த, ஒரு பொண்ணையே பார்த்து ஸ்டைலா தலைமுடி-ய கோதி விட்டு அவளைப் பார்த்து பல்லைக் காட்டிக் கொண்டிருந்தான்.!


(இந்த கதையை, நான்குங்குமம்ஒரு பக்க கதை பகுதிக்காக அனுப்பியிருந்தேன். அத பப்ளிஷ் பண்ணினாங்களான்னு தெரியல. அதனால என்ன? என்னோட ப்ளாக்- நானே  பப்ளிஷ் பண்ணிட்டேன்!)

பெண்கள்... வாயாடிகளா?

ஒரு ஆண் சராசரியாக ஒரு நாளைக்கு 2000 வார்த்தைகள் பேசுகிறார்.


அதே நேரம் ஒரு பெண் 7000 வார்த்தைகள் வரை பேசுகிறார்!

புகைபிடிப்போர் கவனத்திற்கு...

ஒரு மனிதர், ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் புகைக்கிறார் என்றால், அதில் இருந்து வெளிப்படும் ஆற்றலை X-கதிர்களின் கதிரியக்கத்தோடு ஒப்பிட்டால், அது மூலம் நாம் 2000 மனிதர்களின் மார்புப் பகுதியை X-RAY எடுக்க முடியும்.

அதாவது, ஒருவர் ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைப்பதால் ஏற்படும் விளைவும், அதே மனிதரின் மார்புப் பகுதியை  2000 முறை X-RAY எடுப்பதால் ஏற்படும் விளைவும் சமம்!


நெஞ்சு பஞ்சாகி, சாம்பலா போயிடும்...

ஷேக்ஸ்பியர்- நம் முன்னோடி!

Message type பண்ணறப்போ, where are you?- வை wr r u?-ன்னும், brother அப்டீங்கறதை bro-ன்னும் சுருக்கமா எழுதுறோமே, இதயெல்லம் யாரு முதல்ல ஆரம்பிச்சாங்கன்னு எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா?


அது ஷேக்ஸ்பியர். அவர்தான் வரலாற்றுல முதன் முதலா, YOU என்பதை சுருக்கி U-ன்னு எழுதினார்.

FACT ABOUT EATING WITH HAND

வலது கையால் சாப்பிடும் பழக்கமுடையவர்கள், சாப்பிடும் போது கையை அவர்கள் வாயின் வலதுபுறம்தான் கொண்டு போவார்கள்.

இதே போலத்தான், இடது கையால் சாப்பிடுபவர்களும், கையை வாயின் இடதுபுறம் கொண்டு செல்வார்கள்.


Next time சாப்பிடும் போது check பண்ணிப் பாருங்க!

3G NETWORK SIGNAL ON EVEREST

நீங்கள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கும் போது உங்களுக்கு யாராவது call பண்ணினால், அவர்களுக்கு “நீங்கள் அழைக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார்” என்ற செய்தி கிடைக்காது!
காரணம்,
அது,  3G Network-ன் signal, cover ஆகும் பகுதி!!

Wednesday, 13 November 2013

கருவிழியின் நிறங்கள்...

கருவிழியின்(iris) நிறம் பொதுவா இரண்டு வகை, blue இல்லன்னா brown. (சில பேருக்கு பச்சை நிறத்திலேயும் கருவிழி இருக்கும்)

தற்சமயம், 101ங்கற விகிதத்துல brown கருவிழிக்காரர்கள் இருக்காங்க. அதாவது, blue கருவிழியை விட brown-ஐ கருவிழியா கொண்டவர்களோட எண்ணிக்கை குறைவு.

ஆனால், உலகின் முதல் blue கருவிழியை உடைய மனிதர் தோன்றியது, 6000 முதல் 10000 வருடங்களுக்கு முன்னால் இருக்கலாம்-னு விஞ்ஞானிகள் கருதறாங்க. அதுக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாருக்குமே brown கருவிழி தானாம்!

அதே மாதிரி, நாம பார்க்கிற நிறங்களின் தன்மை, கருவிழியில் இருக்கும் மெலனின்-melanin(தோலின் நிறத்திற்கு காரணமான நிறமி) அளவைப் பொருத்து மாறுபடும்!

தெளிவா சொல்லனும்னா, blue கருவிழியை உடையவர் ஒரு வண்ணமயமான பொருளை பார்ப்பதற்கும், brown கருவிழிக்காரர் அதே பொருளை பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கு. ஏன்னா, blue-வை விட brown கருவிழியில் மெலனின் நிறமி அதிகம்.

இன்னும் தெளிவா சொல்லனும்னா, Photoshop use பண்ணுறவங்களுக்கு இது புரியும். நீங்க Photoshop-ல ஒரு color image-work பண்ணி அதோட output-ஐ RGB mode-லயும், CMYK mode-லயும் தனித்தனியா எடுத்து பாருங்க, வித்தியாசம் தெரியும். இப்ப புரியுதா, brown மற்றும் blue கருவிழிக்காரர்கள் பார்வையில் ஏற்படும் வித்தியாசத்தை,

இருவரும் பார்க்கும் பொருள் அப்புறம் அதன் வண்ணம் ரெண்டுமே ஒன்னுதான். ஆனால், வண்ணச்சாயல் அதாவது colot tone-லதான் வேறுபாடு இருக்கு...


Amazing facts about our iris.  

எந்தப் பழம் ரொம்ப தித்திப்பானது... எலுமிச்சையா, இல்ல ஸ்ட்ராபெரியா?

இதுல என்ன சந்தேகம் நிச்சயமா ஸ்ட்ராபெரி-தான். அப்படீன்னு நீங்க சொன்னீங்கன்னா, அது wrong answer.


ஒரு கிலோ ஸ்ட்ராபெரியில்(strawberry) இருக்கும் சர்க்கரையின் அளவை விட, ஒரு கிலோ எலுமிச்சையில்(lemon) இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகம்!