Sunday 17 November 2013

கோழி முட்டையில் இரு நாடுகள் விளையாடும் விளையாட்டு!

இங்கிலாந்தில் இருக்கும் super market-களில் அமெரிக்க முட்டைகளை விற்பது, சட்டப்படி குற்றம். ஏனென்றால் அவை கழுவப்பட்டிருக்கும்.

அதே போல,

அமெரிக்காவில் இருக்கும் super market-களில் இங்கிலாந்து முட்டைகளை விற்பது, சட்டப்படி குற்றம். ஏனென்றால் அவை கழுவப்பட்டிருக்காது!

விறுப்பு, வெறுப்பு, குறை கூறுதல்

நீங்கள் ஒருவரை, அவருக்கு பிடித்த ஒன்று (மனிதர், பொருள், விஷயம்) அது உங்களுக்குப் பிடிக்காமல் இருந்தால், அதைப் பற்றி தொடர்ச்சியாக அவரிடம் குறை கூறிக் கொண்டிருக்கும் பட்சத்தில்,

அவர், தனக்குப் பிடித்த அந்த ஒன்றை வெறுக்க மாட்டார். மாறாக அவர் உங்களை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்!

என் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்டவை - 1#

பகையாளி-கிட்ட பாய்சன்-அ கூட வாங்கி குடிக்கலாம். ஆனா,

பங்காளி-கிட்ட பச்சத் தண்ணி கூட வாங்கி குடிக்கக் கூடாது.

போட்டுரலாமா... வேணாமா? (இரட்டுற மொழிதல் – 2#)

ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்த சாலையில் சிவாவும், ரமேஷும் தீவிரமாக எதைப்பற்றியோ சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு அருகே, பயந்தவாறு கலைந்த தலையுடனும், கிழிந்த ஆடைகளுடனும் ஒரு இளம்பெண் நின்று கொண்டிருக்கிறாள்!

சிவா   : மச்சா... சொன்னாக் கேளு, என்னாலயெல்லாம் இந்த 
         மாதிரி தப்பு பண்ண முடியாது...
         
ரமேஷ் : நீதான சொன்ன, இவ ரொம்ப நாளா தொந்தரவு 
         பண்ணிகிட்டு இருக்கானு. அதான் சொல்றேன்...
         பேசாம போட்டுரு!

அப்போது அந்தப் பெண் ரமேஷை பார்த்து மேலும் பயப்படுகிறாள்

சிவா   : டேய்! சொன்னா புரிஞ்சுக்கடா... இதல்லாம் தப்புடா...

ரமேஷ் : எது, இது தப்பா? இதல்லாம் தப்புன்னா, நாம இன்னும் 
         எவ்ளோ  பண்ண வேண்டியிருக்கு!
        
சிவா   : எனக்கென்னவோ ஒரு மாதிரியா இருக்குடா, நாமளே
         இதையெல்லாம் என்கரேஜ் பண்ணா நல்லாவா இருக்கு?

ரமேஷ் : எவண்டா இவன்... சரியான கிறுக்கனா இருக்கான்! 
         இதப்பாரு தம்பி, இந்த மாதிரி சின்ன 
         விஷயத்துக்கெல்லாம்
         யோசிச்சிகிட்டு இருந்தேனா...
         ஒன்னும் பண்ண முடியாது!
         
சிவா   : “....”

ரமேஷ் : கடைசியா கேட்கறேன், நா சொன்னா கேட்பியா... 
         மாட்டியா?

சிவா   : கேட்பேன்... ஆனால்,

ரமேஷ் : சரி, அப்ப யோசிக்காத. போட்டுரு...உன் 
         நல்லதுக்குத்தான்டா சொல்றேன்...
         (பொறுமை இழந்தவனாய்)
         டேய், பேசாம போற்றா..

ரமேஷின் பேச்சால், சிவா ஒரு முடிவுக்கு வந்தவனாய், சில வினாடிகள் அந்த பெண்ணையே முறைக்கிறான்... திடீரென,

வேகமாக, பின்னாலிருந்து...

பர்சை எடுத்து, அதிலிருந்த இரண்டு ரூபாய் நாணயத்தை, அந்தப் பிச்சைக்காரப் பெண்மணியிடம் நீட்டுகிறான்!

அவளும் அதை வாங்கிக்கொண்டு, “இதுக்கு இவ்வளவு நேரமா?” என மனதில் நினைத்தவாறே, அந்த இடத்தை விட்டு நகர்கிறாள்.

இதுதான் உலகம்!

நீங்கள் ஒரு செயலை எவ்வளவு சரியாக செய்தாலும், யாரும் அதை நினைவில் வைத்திருப்பதில்லை.

அதே செயலில் ஒரு சிறு தவறு செய்தாலும், யாரும் அதை அவ்வளவு எளிதில் மறப்பதில்லை!

அவர்கள்தான் அன்னியோன்யமானவர்கள்!

தனது காதலன் அல்லது காதலியுடன், இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் வரை பழகி, அதன் பிறகு திருமணம் செய்து கொள்கிறவர்கள், வெகு விரைவிலேயே திருமணம் செய்து கொள்கிறவர்களை விட மகிழ்ச்சியாகவும அதேசமயம் விவாகரத்து செய்யாமலும் வாழ்வதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன!

இன்னும் கொஞ்சம்... (இரட்டுற மொழிதல் – 1#)

ப்ரியா  : first time-ஏ ஒரு மணி நேரமா... வாவ்... வாட் ஏ பவர்!

மகேஷ் : உனக்கென்ன சொல்றதுக்கு... அதுக்கு நான் என்ன கஷ்டப்
         படறேன்-னு எனக்குதானே தெரியும்!

ப்ரியா  : உனக்கு இது முதல் தடவை-ல்ல, அதான் 
         கஷ்டமாயிருக்கு...

மகேஷ் : first time இத பண்ணும்போது கஷ்டமா இருக்கும்-னு 
         தெரியும், ஆனா, இவ்ளோ கஷ்டமா இருக்கும்-னு
         நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!
         
ப்ரியா  : ஆனா, நான் உங்கிட்ட இருந்து இன்னும் வேணும்-னு
         எதிர்பார்க்கறேனே!

மகேஷ் : என்னது இன்னுமா... இதுக்கே பெண்டு 
         நிமிர்ந்திடும் போல இருக்கு! என்னால 
         முடியாதுப்பா, ஆளை விடு!
         
ப்ரியா  : ஹலோ! இதுக்கே tired ஆகிட்டா எப்படி? நீ இன்னும் 
         செய்ய வேண்டியது, எவ்ளோ இருக்கு தெரியுமா?
         
மகேஷ் : ச்சே... நீ ரொம்ப மோசம்-டீ, என்னைப் போட்டு இப்படி
         படுத்துறியே?


ப்ரியா  : ஆமாம்ப்பா! ஒரு மணி நேரமா, வெறும் 
         பாத்திரங்களையே கழுவிகிட்டு இருந்தா எப்படி?
         இன்னும் துணி துவைக்கணும், வீடு
         பெருக்கணும், அப்புறமா dinner ரெடி பண்ணணும். 
         அப்போதானே நல்லா சாப்பிட்டு நாளைக்கு
         மீண்டும் இதே மாதிரி வேலை
         செய்ய முடியும்!


பிரசவத்திற்காக தாய் வீடு சென்றிருந்த ப்ரியா, முதன் முறையாக வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் தனது கணவன் மகேஷிடம் போனில் பேசிக்கொண்டிருக்கிறாள்!